கட்டுவிரியன்(part-9)

கட்டுவிரியன் 9

"அம்மா" சிவா பங்கஜத்தை அதிர்ச்சியாய் பார்த்தான்.

"என்னம்மா சொல்ற? ரேவதி அப்பாவை உனக்குத் தெரியுமா?"

"ஆமா"

***

"கீதா" குமரேசன் அழைக்க கீதா அவன் முன் வந்தாள். அவள் முகத்தைப் பார்த்தவன் முகம் மலர்ந்தது.

"சரிமா நான் போயிட்டு வர்றேன்"

கிளம்பியவனை கீதா அழைத்தாள்.

"அண்ணா"

"சொல்லுமா"

"நீ பண்றது ரொம்ப ஓவர்"

"அப்படி என்னம்மா பண்ணேன்? "

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அண்ணி இருக்காங்க. பொண்ணு பொறந்திருக்கா. இருந்தாலும் இன்னும் எங்கயாவது கிளம்பும்போது என்னையே எதிர்வ வரச் சொல்லி பார்க்கிறது சரியா? அண்ணி என்ன நினைப்பாங்க?" கீதா கேட்க

"அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டேன்" என்ற குரல் கேட்டு திரும்பினாள்.


Comments